Tamil News
Home உலகச் செய்திகள் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புரெவி புயல்!

பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புரெவி புயல்!

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கடந்த 24ம் திகதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் கன மழை  பெய்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட தகவலில்,

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530  கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.

புரெவி புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது.

கரையை கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையை கடக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version