பாதுகாப்புத்துறைச் செயலாளராக போர்க்குற்றவாளி கமால் குணரத்ன நியமனம்

அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட லெப். ஜெனரல் சவீந்திர சில்வா இராணுவத்தளபதியாக முன்னார்; அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவினால் நியமனமிக்கப்பட்டது சர்ச்சைகளை உண்டுபண்ணிவரும் நிலையில் தற்போது மற்றுமொரு போர்க்குற்றவாளியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா பாதுகாப்புச் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.

சிங்கள கடும்போக்காளரான கோத்தபாய ராஜபக்சா அரச தலைவராக பெரும்பான்மைச் சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைகயை மேற்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளில் 53 ஆவது படையணியும் ஒன்று. இந்த படைணயியை குணரட்னாவே வழிநடத்தியிருந்தார்.

Kamaal Kuna பாதுகாப்புத்துறைச் செயலாளராக போர்க்குற்றவாளி கமால் குணரத்ன நியமனம்சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களை படுகொலை செய்த படையணிகளில் 53 ஆவது படையணியும் சவீந்திர சில்வா தலைமையிலான 55 ஆவது படையணியும் மிகவும் முக்கியமானவை என அனைத்துலன மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தமிழீழத் தொலைக்காட்சியின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் படுகொலையில் 53 ஆவது படையணியே நேரிடையாக பங்குகொண்டிருந்ததாக கண்காணிப்பகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்தது.

Isaipriya 222 பாதுகாப்புத்துறைச் செயலாளராக போர்க்குற்றவாளி கமால் குணரத்ன நியமனம்1981 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த குணரட்னா, வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒபரேசன் லிபரசன் நடவடிக்கையில் பங்குபற்றியதுடன், மாங்குளம் படைத்தளத்தை 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாக்கி அழித்தபோது அதன் கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றியிருந்தார்.

முகாம் அழிக்கப்பட்டபோது அங்கிருந்த படையினருடன் அவர் காட்டு வழியாக தப்பியோடியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை நீங்கள் கீழ்வரும் இணைப்பில் பார்க்கலாம்.

Sri Lanka: Army Unit Linked to Executions