Tamil News
Home செய்திகள் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அதிபர்கள் – பெற்றோர் ஆலோசனை

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அதிபர்கள் – பெற்றோர் ஆலோசனை

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 11 ஆந் திகதி திறப்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்கள் அனைத்து பாடசாலை அதிபர்களின் தலைமையில் நடை பெற்றுவருகிறது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்கமைவாக வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலே தங்களின் பாடசாலை அதிபர்கள் தங்கள் பாடசாலையின் மாணவர்களுடைய பெற்றோர்களை அழைத்து மாணவர்களின் சுகாதார நடவடிக்கைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக கிழக்கு மாகாண பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் ஆலோசித்துவருகின்றனர்.

நீண்டகாலமாக மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையினை தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்கப்படாமல் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இம்முறை மணவர்களின் 1 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென முழு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா தொற்று அதிகம் காணப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version