பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு கப்டன் விஜயகாந்த் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் கப்டன் விஜயகாந்த் தனது ருவிற்றரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்களை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் கப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “இலங்கை அரசு, இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.