Tamil News
Home செய்திகள் பறிபோனது மற்றுமொரு தமிழர் அடையாளம் ; தரவைக் கோவில் வீதி கடற்கரைப் பள்ளி வீதி என்றாகியது

பறிபோனது மற்றுமொரு தமிழர் அடையாளம் ; தரவைக் கோவில் வீதி கடற்கரைப் பள்ளி வீதி என்றாகியது

கல்முனை தரவைக் கோவில் வீதி எனும் பெயரை கடற்கரைப் பள்ளி வீதி எனும் பெயராக மாற்றும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், பழைய பெயர் செல்லுபடியற்றதாகி விட்டது என்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் (15) மாலை மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மேற்படி சர்ச்சைக்குரிய வீதியின் பெயர் தொடர்பில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே மேயர் றகீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்முனை நகரில் 500 வருடங்கள் மிகப் பழைமை வாய்ந்த கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இந்த வீதி இவ்வாறு முஸ்லிமல்லாளால் பெயர்மாற்றப் பட்டுள்ளது அப்பகுதி தமிழ் மக்களுக்கு பெருத்த வேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version