பண நெருக்கடி காரணமாக ஐ.நா. அலுவலகம் மூடப்படுகின்றது

பண நெருக்கடி காரணமாக ஐ.நா. சபையின் தலைமையகம் இனிவரும் வார இறுதி நாட்களில் மூடப்படுவதாக அதன் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. தனது ருவிற்றர் பக்கத்தில் “நியுயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகம் பணப் பற்றாக்குறை காரணமாக இனிவரும் இறுதி நாட்களில் மூடப்படும்“ என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஐ.நா. பட்ஜெட்டிற்கான பணம் வழங்கிய நாடுகளின் விபரம் பற்றிய ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது. இதில் 30 நாடுகள் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்குள் முழுத் தொகையையும் செலுத்தியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்தியாவிற்கான ஐ.நா.தூதர் சையத் அக்பரூதின் ஐ.நா. பட்ஜெட்டிற்கான முழுத் தொகையை செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார்.

முன்னதாக ஐ.நா.சபையில் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை காரணமாக கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஒத்திவைத்தல், செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் இருக்கின்றோம் என்றும், அதன் பொதுச் செயலாளர் அன்டோனியா குத்தேரெஸ் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குத்தேரெஸ் பணப் பற்றாக்குறையைப் போக்க உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், உறுப்பு நாடுகள் வழங்க மறுத்து விட்டன என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2018 – 2019ஆம் ஆண்டு வரை ஐ.நா. சபைக்குத் தேவையான பட்ஜெட் 5.4 பில்லியன்  டொலர் ஆகும். இதில் அமெரிக்கா மட்டும் 22% வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.