பட்டறிவு கொண்டு படை நடத்திய ‘பால்ராஜ்’ – மருத்துவர் தணிகை

அசாத்திய திறமைகளால் – எம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய ஆற்றலன் புகழ் சிரஞ்சீவியாக எம் மண்ணில் என்றுமே நிலைத்திருக்கும் எண்பதுகளின் நடுப்பகுதில் ஒரு கெரில்லா(guerrilla) போராட்ட வீரனான முத்திரை பதித்தவர் பால்ராஜ் அவர்கள், அந்த கெரில்லா அணிகளை வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றார்.

கெரில்லா போராட்ட வடிவம் மரபுவழி வடிவம் பெற்ற போது, அந்த மரபுவழி இராணுவத்தையும் வழிநடாத்தி வெற்றிகளை குவித்த ஒரு தளபதியை தமிழினம் சமர்க்கள நாயகன் என அழைத்தது.

ஒரு நவீன மரபுவழிச் சமரானது பல்வேறு வகைப்பட்ட, பல்வேறு வகையான தேர்ச்சி மிக்க வீரர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. நவீன சமர்க்களங்கள் என்பது முன்னணி, பின்னணி என இருவகையாக பிரிக்கப்பட்டிருப்பதுடன் பல பிரிவு போராளிகளின் கடுமையானதும், தேர்ச்சி மிக்கதுமான உழைப்பினால் வெல்லப்படுகின்றது.

WhatsApp Image 2021 05 20 at 11.19.15 AM பட்டறிவு கொண்டு படை நடத்திய 'பால்ராஜ்' - மருத்துவர் தணிகை

பல்வேறு தேர்ச்சிகள் மிக்க பல நூறு போராளிகளை மிகத் திறமையாக வழிநடத்தி பல இராணுவ வெற்றிகளை தமிழினத்திற்கு பெற்றுத் தந்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

“Taking care of the wounded in battle is a key element in sustaining the morale of an army or any organised fighting force.”  – Taraki Sivaram-

ஒரு பின்னணி போராளியாக சமர்க் களங்களின் பின்னே அவரது தலைமையில் மகத்தான மருத்துவப்பணி செய்த எனது பார்வையில் சமர்க்கள நாயகன் எப்படி இருந்தார் என கீழே பதிவு செய்கின்றேன்.

எமது போராளிகள் சாவுக்கு அஞ்சாதவர்களாக போர்க் களங்களில் உலா வருவார்கள். ஆனால் போரில் விழுப்புண் அடைவதால் உண்டாகும் வலியினை போக்கிட அருகே களமருத்துவர்கள் அருகிருக்க வேண்டும் என்பதை அதிகம் விரும்புவார்கள். அப்படி களமருத்துவர்கள் நெருக்கமாக அருகிருந்த சமர்களில் எல்லாம் களமுனை போராளிகளின் போரிடும் ஆற்றலும், வினைத்திறனும் அதிகம் இருந்ததை தனது பட்டறிவால் பரிபூரணமாக அறிந்தவர்தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். ஆம், மேற்படி இராணுவ ஆய்வாளரும் மாமனிதருமான சிவராம் சொன்னது போல போரிடும் வீரர்களுக்கு தேவையானது என்ன என்பதை அச்சொட்டாய் புரிந்து கொண்டவர் எங்கள் சமர்க்கள நாயகன்.

WhatsApp Image 2021 05 20 at 11.19.14 AM 2 பட்டறிவு கொண்டு படை நடத்திய 'பால்ராஜ்' - மருத்துவர் தணிகை

 

எந்தச் சமரினை எடுத்துக் கொண்டாலும் அச் சமருக்காக தனக்கு தலைவரால் வழங்கப்பட்டுள்ள களமருத்துவ அணியின் ஆற்றல்கள் எத்தகையது? மருத்துவ  அணியில் எத்தனை களமருத்துவர்கள் உள்ளனர்? எத்தனை மருத்துவ நிர்வாக போராளிகள் உள்ளனர்? எங்கெங்கு நிலையெடுத்து உள்ளனர்? அவர்களின் நடைபேசி(Walkie Talkie) இலக்கம் எல்லாமே அவரிடம் இருக்கும். அந்த விபரங்களை எல்லாமே தனது கையடக்கக் குறிப்பேட்டில்(Note Book) குறித்தும் வைத்திருப்பார்.

எல்லா விபரங்களையும் குறிப்பேட்டில் ஒரு எழுதுவினைஞர் போல எழுதி வைத்திருந்தாலும் தேவைப்படும் போது தனது அதீத நினைவாற்றல் மூலம் நினைவுபடுத்தியே கட்டளைகளை இட்டவாறு இருப்பார். மருந்தும் மருத்துவமும் எவ்வளவு முக்கியமோ அதேயளவு வெடிமருந்து களஞ்சியத்தையும்(Ammunition andArmory) அவற்றை விநியோகம் செய்யும் அணியையும் தன்னருகிலேயே வைத்திருப்பார். ஒரு சமர்க்களத்தில் முன்  தளத்தைப்(Foreword Defence Line) போலவே பின் தளத்தையும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து தானே நேரடியாக ஒழுங்கமைப்பவர்.

முன்னணியில் நின்று மூர்க்கமுடன் களமாடும் வீரனுக்கு கொடுக்கும் அதே அளவு மரியாதையினை அங்கீகாரத்தினையும் பின்னணியில் நின்று பணி செய்யும் வீரர்களுக்கு கொடுப்பார். பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் அடைந்த மகத்தான வெற்றிகளின் பின்னணியில் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பும் அதற்கு என்றுமே கட்டியம் கூறி நிற்கும்.

புலிகளின் முக்கிய தளபதி பால்ராஜ் தொடர்பான வழக்கில் யாழ். நீதிவான் அதிரடி உத்தரவு - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

“லீமா” எனும் குறியீட்டுப் பெயரினால் களத்திடையே கனகாலம் வாசம் செய்த இவரின் இயற்பெயர் கந்தையா பாலசேகரம் ஆகும். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இந்த உளவுரண் ஊட்டல்  என்றுமே நல்லூட்டமாய் அமைவதால் முன்னணி வீரர்களை போலவே  பின்னணியில் சேவையாற்றும் நாங்களும் எப்போதுமே காலில் சக்கரம் பூட்டியவர்களாக வேகமாக இயங்கிக் கொண்டே இருப்போம்.

உலக இராணுவ வல்லுனர்களால் வியந்துரைக்கப்படும் குடாரப்பு தரையிறக்கமும் அதைத் தொடர்ந்து ஆனையிறவுப் பெருந்தளத்துக்கான விநியோக வழிகளை(A9 நெடுஞ்சாலை) துண்டாடி இரவு பகலாக முப்பது நான்கு  (34)நாட்கள் சமராடிய அணிகளை வெற்றிகரமாக வழிநடத்திய அந்த நாட்களை செம்மொழியாக எம் மொழியாலும் இயம்பிட முடியாது.

இத்தாவில் பகுதியில்  பெட்டி போன்ற வடிவில் வியூகம் அமைத்தாடிய சமரின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்று அவரின் கடின உழைப்பு  ஆகும். அதே போல போராளிகள், இளநிலை தளபதிகள், சிறப்பு எல்லைப்படை வீரர்கள் சமர்கள நாயகன் மீது கொண்டிருந்த அதீத நம்பிகையும் பென்னம் பெரிய வெற்றியை நோக்கி அவர்களை உந்தியது.

போராளிகள் நம்பிக்கை வைத்திருந்ததை போலவே பொதுமக்களும் எங்கள் சமர்க்களநாயகன் மீதிலே  பெருநம்பிக்கை வைத்திருந்தார்கள். மார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் “மார்ஸ்” என்னும் உரோமானியப் போர்க் கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் அவர்கள் “பால்ராஜ்” எனும் தம் போர்க் கடவுளை அதிகம் நினைக்கும் மாதம் ஆகும். ஆம், அப்படியொரு பங்குனியில் தான் வடமராட்சியின் கிழக்கு சுடுமணலில் காயப்படும் மக்களுக்காகவும், விழுப்புண் அடையும் போராளிகளுக்காகவும் காப்பகழிகள் அமைத்துக் கொண்டிருந்தோம். மணல் மண்ணின் தன்மை இறுக்கமானது அல்லவே அதனால் நீரில் எழுத்துப் போல அது முடியாத காரியமாகவே இருந்து கொண்டிருந்தது.

WhatsApp Image 2021 05 20 at 11.19.14 AM 1 பட்டறிவு கொண்டு படை நடத்திய 'பால்ராஜ்' - மருத்துவர் தணிகை

எதிரியும் பலமுனைகளில் இருந்தும் ஆட்லெறி, ஐந்து இஞ்சி எறிகணைகள் என எங்கள் மக்கள் பெருமளவில் தங்கியிருந்த செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலயத்தை அண்டிய பிரதேசத்தில் அள்ளிக் கொட்டிக் கொண்டேயிருந்தான். அந்த நேரத்தில்தான் சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் அரசியற்பிரிவைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார். போரில் சிக்குண்ட மக்கள் சுண்டிக்குளம் பகுதியில் தங்குவதற்காக கொட்டகைகள் அமைத்துவிட்டு பெரிய வாகனம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.

அங்கிருந்த அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார்தான் தன் பங்கு மக்களையும் அயலூர் மக்களையும் காத்து நிழலாக நின்றவர். ஆதலால் அருட்தந்தை ஊடாகவே மக்களுடன் பேசி பாதுகாப்பான சுண்டிக்குளம் பகுதிக்கு அழைத்துச் செல்ல முற்பட்டார். மக்கள் பின்னே செல்ல மறுத்துவிடடார்கள். எல்லாமே பயன் அற்றுப்போய் அவர் எங்களிடம் வந்தார்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துக்கட்ட (Wound Dressing) முதல் நாளும் அவர்களுக்கு ஏற்புவலித் தடுப்பு ஊசி (Anti Tetanus Toxoid) போடுவதற்கு என இரண்டாவது நாளுமாக, இரண்டு நாட்கள் முன்னரே அவர்களுடன் பழகியவர்கள் என்ற முறையில் உதவி மருத்துவர் வண்ணனும் மருத்துவத் தாதி அருள்நங்கையும் அடியேனும் அவர்களுடன் பேசினோம். அதன் பின்னர் சிலர் சம்மதித்தனர். இப்போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுத்தவர்களிடம் காரணம் கேட்டோம்.

“இஞ்சை வந்திருக்கிறது பால்ராஜ் தம்பி, ஆனையிறவில் உள்ள ஆமி இரண்டொரு நாட்களில் ஓடிவிடுவான்”…பிறகு “நாங்கள் ஏன் ஓடுவான்…?” என்று இராணுவ ஆலோசகர்கள் போல எங்களிடம் திரும்பக் கேள்வி கேட்டார்கள். ஆம், தமிழர்கள் தம் காவல் தெய்வங்களை வெகுவாகவே நம்பினார்கள். அதிலும் சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் (Man of Valour) அவர்களை மக்கள் மலையாகவே நம்பினார்கள். அஃதே, சமர்கள நாயகனும் மக்களை ஆழமாக நேசித்தார் என்பதற்கும் பெட்டிச் சமரில் நடந்த ஒரு சம்பத்தையே உதாரணமாக சொல்கின்றேன். இத்தாவில் பெட்டிச் சசமர் நடந்த பகுதியில் சிக்கிய மூன்று குடும்பங்களை சேர்ந்த எட்டுப்பேரை கண்டு கொண்ட லெப்.கேணல் இராஜசிங்கன் தலைமையிலான சாள்ஷ் அன்ரனி படையணியினர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு நடைபேசியில் அறிவித்தனர். உடனடியாக அவர்களை ஒரு கீறல் காயங்கள் கூட ஏற்படாதவாறு அவர்களின் உடமைகளுடன் பின்னுக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளையிட்டார்.

பால்ராஜ் hashtag on Twitter

இத்தாவிலுக்கும் செம்பியன்பற்றுக்கும் இடையில் உள்ள நன்னீர் எரியூடகத்தான் அவர்கள் படகுகள் மூலம் பின்னுக்கு பக்குவமாக அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு பின்னுக்கு அனுப்பட்டவர்களில் நான்கு பேர் மிகவும் வயதானவர்கள் அவர்களில் ஒருவர் 94 வயது மூதாட்டி ஆவார். பெட்டிச்சமர் நிறைவுக்கு வந்து ஆனையிறவும் முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் ஏறத்தாழ மூன்று மாதங்களின் கடந்த நிலையில் களமுனை களமருத்துவர்களையும் மருத்துவ போராளிகளையும் சந்தித்தார்.

நடந்து முடிந்த சண்டை தொடர்பில் நிறைய விடையங்களை பேசியதுடன் எங்கள் எல்லோரையும் வெகுவாக பாராட்டினார் அதன் ஒரு கட்டத்தில் இத்தாவில் களத்திடை மீட்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பிலும் கேட்டார். அத்தனை வேலைகள் பணிச்சுமைகள் மத்தியிலும் அந்த மக்கள் தொடர்பில் அவர் கேட்ட போது நாங்கள் அனைவரும் அசந்து போனோம். அவர்களை எங்கே அனுப்பி வைத்தீர்கள் எனக் கேட்டார். நல்ல காலம் நாங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரிடம் அந்த மக்களை அனுப்பிய போது அவர்கள் தந்த ஒரு கடிதம் என்னிடம் இருந்தது. அந்த கடித்தில் இருந்த அவர்களின் முகவரியை பார்த்துச் சொன்னேன். சந்திப்பின் இறுதியில் அந்த மூதாட்டி தற்காலிமாக தங்கியிருந்த அக்கராயன் கிளிநொச்சி விலாசத்தை தனது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.

21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பிரிகேடியர் பால்ராஜ்! | வேர்கள்

மிடுக்கு மிகுந்த இந்த மூத்த தளபதியின் எல்லையில்லாத பேரன்பும் பேச்சும் மூச்சும் எங்களை அன்று இயக்கிக் கொண்டேயிருந்து. தமிழர்தம் போரியல் மேதை சமர்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் காலத்தில்  வாழ்ந்தோம் என்பதில் அதிகம் அதிகம் பெருமை கொள்கின்றோம்! அசாத்தியமானது என எதிரி எதிர்பார்த்த களநிலைகளும் வெற்றிகளும் எங்கள் சமர்க்களநாயகன் முன் சாத்தியம் ஆகிய போரியல் வரலாறுகள் நீண்டு பெரும் அத்தியாயங்களை கொண்டது.  அவற்றை நினைவு கூருவதும் பதிவு செய்வதும் எம்மை நாமே மீளாய்வு செய்யவும், அவர் போன்ற வீரத் தளபதிகளின் தடம் பதித்து எமது உரிமைகளை வென்றெடுக்கவும் வழி சமைக்கும்.