படைத்துறை செய்மதியை விண்ணில் ஏவியது ஈரான்

படையினருக்கு தேவையான தகவல்களை திரட்டும் செய்மதி ஒன்றை ஈரான் இன்று (22) விண்ணில் ஏவியுள்ளது.

இதுவே ஈரானின் முதலாவது படைத்துறை செய்மதியாகும். முன்னர் பல தடவைகள் ஈரானின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தபோதும் தற்போது அது வெற்றிபெற்றுள்ளது.

பூமியில் இருந்த 425 கி.மீ தூரத்தில் பயணிக்கும் இந்த செய்மதி மூலம் ஈரான் படையினர் பல நன்மைகளை அடைவதுடன், புலனாய்வுத் தகவல்களையும் திரட்ட முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஆனால் ஈரானின் இந்த முயற்சி ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிரானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.