பங்கோலியன் என்ற மிருகத்தின் மூலமே வைரஸ் பரவியது?

சீனாவக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்ட பங்கோலியன் என்ற மிருகத்தின் மூலமே கோவிட்-19 மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

காட்டு மிருகங்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களை தவிர்க்க முடியும் என அனைத்துலக குழு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கடத்திவரப்படும் பங்கோலியன் என்ற மிருகம் மருந்து மற்றும் உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்படுவதுண்டு.

வெளவ்வால்களும் வைரசை அதிகம் பரப்பும் உயிரினமாகும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.