Tamil News
Home செய்திகள் நிசாந்த சில்வா கொண்டுசென்ற படுகொலை ஆவணங்கள் ஐநா மனிதவுரிமைகள் ஆணைக்குழு மற்றும் யஸ்மீன் சூகாவிடம்

நிசாந்த சில்வா கொண்டுசென்ற படுகொலை ஆவணங்கள் ஐநா மனிதவுரிமைகள் ஆணைக்குழு மற்றும் யஸ்மீன் சூகாவிடம்

சிறிலங்கா இரகசியப் காவல்துறை பரிசோதகர் நிசாந்த சில்வா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்த கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கைகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரகசிய ஆவணங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கண்டதாக  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுசைன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்பான அறிக்கையே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றன.

இதேவேளை, இரகசியப் காவல்துறை முன்னெடுத்த சம்பவங்கள் தொடர்பான 100 இரகசிய ஆவணங்களும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுக்கும் ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகாவுக்கும் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Exit mobile version