Tamil News
Home செய்திகள் நாட்டுக்குப் பாதகமான 3 முக்கிய தீா்மானங்கள் – முன்னிலை சோசலிக் கட்சி குற்றச்சாட்டு

நாட்டுக்குப் பாதகமான 3 முக்கிய தீா்மானங்கள் – முன்னிலை சோசலிக் கட்சி குற்றச்சாட்டு

புதுவருடத்துக்கு முன்பாகவே ரணில் ராஜபக்ச அரசாங்கத்தினால் நாட்டுக்குப் பாதகமான முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்துமெனவும் முன்னிலை சோசலிக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

வகுப்பறை உபகரணங்கள், அம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்ற போது,இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும்
பேசுகையில் தெரிவித்தவை வருமாறு –

சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் அம்பலமாகியுள்ளன. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டத்தை நடத்தி திருடர்களை நீதிமன்றில் நிறுத்தியது.

மருந்துப் பொருள் மோசடி குறித்து பலர் பேசினாலும், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

வங்குரோத்தான நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள், திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்,இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம் என்றார்.

Exit mobile version