Home செய்திகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பொது உடன்பாடு அவசியம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இன்று விசேட உரை

நாட்டின் முன்னேற்றத்திற்கு பொது உடன்பாடு அவசியம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இன்று விசேட உரை

ranil 1 நாட்டின் முன்னேற்றத்திற்கு பொது உடன்பாடு அவசியம் - பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இன்று விசேட உரைஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டுக்கான பொது உடன்பாட்டின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலட்சியங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாக அமையும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இன்று நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைப் பொருத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அன்று தம்மை நாட்டுக்கு துரோகம் செய்தவர்களாக முத்திரை குத்திக்கொள்ள போகிறார்களா அல்லது நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் என்ற அடையாளத்தை பெறப் போகிறார்களா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சமூகம், அரச சார்பற்ற அமைப்புகள், வெவ்வேறான சிந்தனைகளை கொண்ட தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் உள்ளிட்ட சகலரும் பொது உடன்பாட்டுன் இணைந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

Exit mobile version