Tamil News
Home செய்திகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது குறித்து ஹக்கீம் அலட்டிக்கொள்ளவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது குறித்து ஹக்கீம் அலட்டிக்கொள்ளவில்லை

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பில் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம்  அலட்டிக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் உலக வல்லரசு நாடொன்றின் இலங்கையில் உள்ள தூதரகமொன்றுக்கு மேற்படி தகவல் கிட்டியுள்ளது.

தூதரகத்தின் தகவல் பிரிவுக்கு இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அங்கு கடமையாற்றும் நண்பர் ஒருவர் இன்று காலை உறுதி பட சுட்டிக்காட்டினார்.

அவரது தகவல்களின் படி :-

முகா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீம் உட்பட ஐவர் உள்ளனர். இவர்களில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொள்ள தீர்மானித்து, இணைந்து கொண்டாலும் ஹக்கீம் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளவே இல்லையாம் .

அரசுடன் இணைவதென்றால் தாராளமாக இணைந்து கொள்ளட்டும் என கட்சித் தலைவரான ரவூப் ஹக்கீம் கருத்து வெளிப்படுத்தியுள்ளதாக தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள இரகசிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேற்படி தூதரக நண்பர் குறிப்பிட்டுக்காட்டினார்.

“எவர் வேண்டுமானாலும் அரசுடன் இணையட்டும். ஆனால் நானும் கட்சியும் அப்பிடியேதான் இருப்போம்” என்றும் ஹக்கீம் கூறியுள்ளதாகவும் – தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள அந்த இரகசிய குறிப்பில் காணப்படுகின்றதாம்.

ஏ.எச்.எம். பூமுதீன்.

Exit mobile version