Home செய்திகள் நாட்டில் இருப்பது அரசாங்கம் அல்ல; தரகர் நிறுவனங்களே – அனுர குமார குற்றச்சாட்டு

நாட்டில் இருப்பது அரசாங்கம் அல்ல; தரகர் நிறுவனங்களே – அனுர குமார குற்றச்சாட்டு

“எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமான இந்த நாட்டின் வளங்களை பாதுகாப்பதற்காக போராடுவதற்காக நாங்கள் இன்று இங்கு கூடியிருக்கிறோம் என்பதை ராஜபக்ஷ அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரா திசாநாயக்க நேற்று காலிமுகத் திடலில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணியில் அறைகூவல்விடுத்தார்.

70 நாட்டில் இருப்பது அரசாங்கம் அல்ல; தரகர் நிறுவனங்களே - அனுர குமார குற்றச்சாட்டுகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை உட்பட நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

மேலும் பேசுகையில் அனுர திசாநாநாயக்க தெரிவித்தவை வருமாறு;

“நம் நாட்டு மக்கள் 1978 முதல் அரசாங்கங்களை அமைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அரசாங்கங்கள் அல்ல, தரகர் (Broker) நிறுவனங்களாகும்.. ஜே.ஆர்.ஜெயவர்தன சில நெசவாலைகளை விற்றார். பிரேமதாசா நம் நாட்டில் போருந்தோட்ட நிலங்களை விற்றார். அதன் பிறகு சந்திரிகா தரகர் நிறுவனம், ஏர் லங்கா மற்றும் பால் மா தொழிற்சாலை உள்ளிட்ட பெருமதிமிக்க வளங்களை விற்றார். பின்னர் விக்ரமசிங்க புரோக்கர் நிறுவனம் வந்து அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டது. கொழும்பு நகரம் மற்றும் கல்பிட்டி தீவுகளில் முக்கியமான நிலங்களை விற்கத் திட்டமிடப்பட்டது.

அடுத்து வந்தது ராஜபக்ஷ தரகர் (Broker) நிறுவனம். போர்ட் சிட்டி (Fort city) பல ஏக்கர் விற்கப்படுகிறது. இது 99 ஆண்டுகளுக்கு இலங்கையர்களுக்கு சொந்தமானது அல்ல. ராஜபக்ஷ தரகர்கள் இதை சீனாவுக்கு விற்றனர். பாதுகாப்புப் படைத் தலைமையகம், இராணுவ மருத்துவமனைக்கு உரிய காணியை ஸ்ராங்ரில்லா ஹோட்டலுக்கு விற்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் ஒரு ஆழமான முனையம் சீன C.I.C.T நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.”

போராட்டத்தில் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் தோழர் லால் காந்த உரையாற்றும்போது

“நம் நாட்டில் மக்கள் போராட்டத்தின் மற்றொரு அலை இன்று கோல்பேஸ் (Gall Face) மைதானத்தில் தொடங்கியிருநக்கிறது. நம் நாட்டில் உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கான அடித்தளம் துறைமுக தொழிற்சங்கங்களின் சகோதர, சகோதரிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து 23 துறைமுக தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் மையமாக மாறிவிட்டன. சமீபத்திய காலங்களில் எந்தவொரு போராட்டத்திலும் இதை நாங்கள் காணவில்லை. மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் விற்பனைக்கு எதிரான போராட்டங்களின் நீண்ட வரலாறு உள்ளது. சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், கொண்டுவரப்பட்ட “ரீகெய்னிங் சிரீ லங்கா” வேலைத்திட்டத்தைப் பாரிய போராட்டத்தின் மூலமாக நாங்கள் தோற்கடித்தோம். இந்த போராட்டங்களின் விளைவாக, கொழும்பு துறைமுகம் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது, இது கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நாட்டிற்கு 1% கூட கொடுக்க அனுமதிக்கப்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும். ” எனத் தெரிவித்தார்.

Exit mobile version