Home ஆய்வுகள் தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

தாயகத்தில்  தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள்ச் சின்னங்கள்,ஆலயங்கள், மரபுப் பொருட்களை அபகரித்து வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் சிறிலங்கா அரசும்,அதன் அரசியல்வாதிகளும்,பௌத்த பிக்குகளும் அன்றுமுதல் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். இந்த செயற்பாடுகள் போருக்கு பின்னான இந்த காலப்பகுதியில் மேலும் தீவிரம் பெற்றுள்ளன.

சிங்கள பௌத்த மேலாதிக்கம் காரணமாக வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம்,மகாவலி அபிவிருத்தி திணைக்களம்,தொல்லியல் திணைக்களம், என முக்கியமான திணைக்களங்களை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக இருக்கும் பொளத்த தலைவரின் நேரடி கண்காணிப்பில் இருக்குமளவுக்கு சட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

மேற்குறித்த திணைக்களங்களில் எந்த செயற்பாடுகள் செய்யவேண்டுமாக இருந்தாலும் ஜனாதிபதியில் அனுமதியின்றி செய்யமுடியாது.இவ்வாறு இருக்கும் ஸ்ரீலங்கா அரசின் நிர்வாக எல்லைக்குள் தமிழர்களின் பூர்வீகம் அழிக்கப்படும் அபகரிக்கப்பட்டும, மறைக்கப்பட்டும் வருகின்றது.3 3 தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

இந் நிலையில் இவ்வாறான அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரிய சொத்தான வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும் அதன் வழங்களையும் அபகரிக்கும் முயற்சியில் வனவளத் திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும்,பொலிஸாரும் இணைந்து நீதிமன்றில் பல வழக்குகளை தெடுத்துள்ளனர்.

ஆலயத்தின் அமைவிடமும் வரலாறும் வவுனியா நெடுங்கேணி நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் வெடுக்குநாரி மரங்கள் சூழ்ந்த அடந்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர்.

4000 வருடங்களுக்கு முன்பிருந்து பரம்பரை பரம்பரையாக வெடுக்குநாரி மலை ஆலயத்தில் மரபு வழி வழிபாடு, மற்றும் பூசை முறைகள் நடைபெற்று வருகின்றது.

ஒலுமடு சந்தியிலிருந்து அடர்ந்த காட்டுப் பாதை ஊடாக 4.5 கிலோமீற்றர் உழவு இயந்திரத்தின் மூலமும் நடந்துமே குறித்த ஆலயத்திற்கு செல்லமுடியும்.

கதிர்காமம் மலைக்குச் சொல்லும் அனுபவத்தை வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் அனுபவிக்கமுடியும். 4.5 கிலோமீற்றர் காட்டுபிரதேசப் பயணம் அதன்பின் சுமார் 100 அடி உயரமுடைய மலையில் செயற்கை படி மற்றும் பெரிய மரங்களின் வேர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியே மலை உச்சியில் இருக்கும் ஆதி லிங்கேஸ்வரரை வழிபடமுடியும்.

இவ்வாறு இயற்கை மற்றும் வரலாற்று சிறப்புடைய வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீது தற்போது ஸ்ரீலங்கா சிங்கள பௌத்த தலைவர்களின் கண்பட்டுவிட்டது.

இதன் பிரதிபலிப்பு ஆலய நிர்வாகத்தினர் மீது வழக்குத்தாக்கள், தொல்பொருற்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் முற்றுகை,வனவளம் பாதிக்கப்படுவதாக வனவளத் திணைக்களம்,வனஜீவராசிகள் பாதிக்கப்படுவதாக வனவளத் திணைக்களம் என சுற்றிவளைத்து தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதபூமியை அபகரித்து சிவனைத் துரத்தி புத்தரை வரவழைக்கும் முயற்சியில் நேர்முகமாக பலரும் மறைமுகமாக பலரும் ஸ்ரீலங்கா அரச துணையுடன் 24 மணிநேரமும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந் நிலையில் கோவில் நிர்வாகத்தினரின் முயற்சியில் விசேட நாட்களில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் கடந்த 21.02.2020 அன்று மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வவுனியா, களிநொச்சி,முல்லைத்தீவு,ஆகிய மாவட்டங்களில் இருந்து பொக்கிசம் கனடா அனுசரணையில் இயங்கும் அறநெறியில் கல்வி கற்கும் 500 மாணவர்கள் வெடிக்குநாரி மலைக்கு வருகைதந்து ஆலயத்தை தரிசித்த அதே வேளை, கலை நிகழ்வுகளையும் நடாத்தியிருந்தனர்.

இதேபோல ஒலுமடு,மற்றும் நயிநாமடு பாடசாலை மாணவர்கள் சிவராத்திரி தினத்தன்று இரவு விசேட கலைநிகழ்வுகளை அரங்கேற்றியிருந்தனர்.

போக்குவரத்து, குடிநீர்,மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத வெடுக்குநாரிமலை காட்டுப் பகுதியில் பாரம்பரியத்தையும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் முயற்சியில் இவ்வருடம் சிவன் ராத்திரி வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலையத்தில் நடைபெற்றமை மற்றுமொரு வரலாற்று சிறப்பு.

வெடுக்குநாரிமலையில் ஸ்ரீலங்கா அரசின் ஒடுக்குமுறை ஆலயத்தியத்தில் ஒலிபெருக்கித் தடை,மலையில் ஏறும் ஏணி வைப்பதில் தடை, பூசைகள் செய்வதற்கு தடை மக்கள் செல்வதற்குத் தடை என பல தடைகளை போட்டாலும் மக்களின் எழுட்சியில் இன்றும் வெடுக்குநாரி மலையில் பூசைகள் நடைபெற்று வருகின்றது.

தமிழ் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருந்த நபரே இன்று ஸ்ரீலங்காவின் சனாதிபதி இவருடைய ஆற்சிக் காலத்திலும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றுச் இடங்கள் பறிபோகக்கூடாதென இன்றும் தாயக உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந் நிலையில் புலம் பெயர் உறவுகளும் தாயக பிரதேசங்களுக்கு விடுமுறையில் வரும்போது கதிர்காமம் போகவேண்டாம் என்று சொல்லவில்லை எமது மண்ணில் இருக்கும் வெடுக்குநாரி மலைக்கு சென்று சிவனின் ஆசியைப் பெற்று உலகுக்கு வெளிப்படுத்த்தி தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பாற்ற உங்கள் கரம் உயரட்டும்.

கதிர்காமக் கந்தன் இன்று ஸ்ரீபாத புத்தனாக மாறிவிட்டான்,திருகோணமலை வெண்ணீரூற்று சிவன் கோவில் இன்று பௌத்த கோவில்,பொளத்த ஆதிக்கம் சப்ரகமுவ கதிர்காமத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வரை வந்துவிட்டது.

தற்போது தமிழர் தாயகப்பிரதேசங்காளான வவுனியா,மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை போன்ற அனைத்து மாவட்டங்களிலும் புத்தர் வந்து குடியமர்ந்து விட்டார்.

இதில் வேடிக்கையான விடையம் புத்தரின் பக்தர்கள் இல்லாத இடங்களில் அமைக்கப்பட்ட பொளத்த விகாரைகள் இன்று பறவைகள்,குரங்குகளின் சரணாலயமாகிவிட்டது. இருந்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிது புதிதாக தினம்தோறும் பௌத்த விகாரைகள் முளைத்துக்கொண்டே செல்கிறது.

இந் நிலை தொடர்ந்தால் பௌத்த பிக்குமார் அடிக்கடி மேடைப் பேச்சுக்களில் சொல்லுவது போல் இலங்கை எதிர்காலத்தில் சிங்கள பௌத்த நாடாக மாறும் என்பதில் ஐயப்பாடில்லை.

இவற்றை மாற்றியமைக்க புலம்பெயல் தமிழரும் ஈழத் தமிழரும் நவநாகரீக வாழ்க்கையில் மூழ்கிப்போகாது எமது தாயகத்தைக் காப்பாற்ற நீண்டதூர நோக்குடன் திட்டங்களை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தி எமது மண்ணையும் தமிழர்களின் வரலாற்றையும் பறைசாற்றவேண்டியது தலையாய கடமையாகும்.

Exit mobile version