Tamil News
Home உலகச் செய்திகள் தொண்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அவுஸ்திரேலிய அரசு விளக்கம்

தொண்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அவுஸ்திரேலிய அரசு விளக்கம்

அவுஸ்திரேலிய அரசு தொண்டு நிறுவனங்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இக்கட்டுப்பாடுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தொண்டு நிறுவனங்கள் தலையீட்டை தடுக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொண்டு நிறுவனங்கள் போர்வையில் செயல்படும் செயற்பாட்டாளர்களை(Activist Organisations) அடையாளம் காண இந்த கட்டுப்பாடுகள் தேவையானவை எனக் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய அரசின் உதவிப் பொருளாளர் Michael Sukkar.

“நன்கொடைகள் மற்றும் வரிச் சலுகைகள் மூலம் தொண்டு நிறுவனங்களை அவுஸ்திரேலியர்கள் தொண்டு செயல்பாடுகளுக்காக ஆதரிக்கின்றனர், சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கவோ அல்லது அதில் பங்கேற்கவோ அவர்கள் நன்கொடை வழங்கவில்லை,” என Michael Sukkar குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version