Tamil News
Home செய்திகள் தேவாலயங்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்காகப் பயன்படுத்த தேசிய கிறிஸ்தவ பேரவை அனுமதி

தேவாலயங்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்காகப் பயன்படுத்த தேசிய கிறிஸ்தவ பேரவை அனுமதி

இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை (NCCSL)யின் பிரதிநிதிகள் தமது தேவாலயங்கள் மற்றும் நிலையங்களை தடுப்பூசி திட்டத்துக்காகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

“எமது அன்றாட வாழ்க்கையிலும் வேலைகளிலும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்து மக்களையும் நாம் அழைக்கிறோம்.

தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள தினசரி ஊதியம் பெறுவோருக்கு ஏற்படும் தாக்கத்தை ஏற்றுக்கொள்வதுடன் இத்தகைய சூழ்நிலைகளில் அவர்களுக்கான அடிப்படைநிதி உதவியை வழங்குவதற்கான சாத்தியத்தை நாம் ஆராயலாம்.

அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முடியவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அவர்கள் இலங்கைக்குத் திரும்பியதும் தனிமைப்படுத்தலுக்கு மலிவு வசதிகள் இல்லாதது.

நாம் அனைத்து இலங்கையர்களையும் குறிப்பாக அனைத்து கிறிஸ்தவர்களையும் இத்தகைய மக்களை பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீளக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் பங்கேற்க முன்வருமாறு அழைக்கிறோம்” என்றனர்.

Exit mobile version