Tamil News
Home செய்திகள் தேர்தலை எதிர்நோக்க அச்சப்படுவதால் எதிர்க்கின்றனர் வாசுதேவ நாணயக்கார

தேர்தலை எதிர்நோக்க அச்சப்படுவதால் எதிர்க்கின்றனர் வாசுதேவ நாணயக்கார

தேர்தலை எதிர்நோக்க அச்சப்பட்டே எதிர்க்கட்சியினர் தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கலந்துரையாடல் நிறைவில் ஊடகங்களுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்துத் தெரிவித்தார்.

அவர் கருத்து வெளியிட்ட போது கூறியதாவது, “இந்த கலந்துரையாடலின் போது சில தரப்பினரின் தேவையில்லாத கருத்துக்கள் மற்றும் சட்டச் சிக்கல்களைக் கூறி, பொதுத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டதை அறிய முடிந்தது.

கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுமானால் ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை எதிர்ப்பதற்கு எந்தவொரு காரணமும் கிடையாது.

எம்மைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே இவர்கள் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றார்கள்“ என கூறினார்.

Exit mobile version