தேர்தலில் நிற்பதால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – சிவாஜிலிங்கம்

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்­தலில் தான்  போட்­டி­யிட தீர்­மா­னித்­த­மை­யினால் உயி­ரச்­சு­றுத்தல் ஏற்பட்டுள்ளதாக தனக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்பு மனு பத்­தி­ரங்­களை நேற்று  தேர்தல் ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பித்­ததன் பின்னர்  ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும்   தெரி­விக்­கையில் ஜனா­தி­பதி தேர்­தலில் தெற்கில் உள்ள அடிப்­படை பிரச்­சி­னைகள் மாத்­தி­ரமே கருத்திற் கொள்­ளப்­ப­டு­கின்­றன. வடக்கு , கிழக்கு  மற்றும் மலை­யகம் வாழ் தமிழ் மக்­கள்கள் தொடர்ந்து புநக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இந்­நிலைi முழு­மை­யாக மாற்­ற­ம­டைய வேண்டும்.

தமி­ழ­ருக்கு அர­சியல் ரீதியில் முழு­மை­யான தீர்வு கிடைக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் இருந்து  அர­சியல் ரீதியில் பல அழுத்­தங்­களை பிர­யோ­கித்­துள்ளேன். அதில் ஒன்­றா­கவே ஜனா­தி­பதி தேர்­தலின் போட்­டி­யிடும் தீர்­மானம் காணப்­ப­டு­கின்­றது.

டெலோ அமைப்பின் அடிப்­படை கொள்­கை­க­ளுக்கு ஒரு­போதும் முர­ணாக செயற்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி தேர்­தலில் சுயா­தீ­ன­மான போட்­டி­யி­டு­வது எவ்­வித தவறும் கிடை­யாது.  இத்­தீர்­மா­னத்­திற்கு எதி­ராக கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாயின் அதனை எதிர்க் கொள்ள தயார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் சுய­மாக போட்­டி­யிட தீர்­மா­னித்­ததை தொடர்ந்து இரண்டு பிர­தான கட்­சி­க­ளிடம் இருந்து  நேற்று (07) வேட்புமனு தாக்கல் செய்யும் வரை உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.