தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு

தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசளிப்பு நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச முதியோர் தினத்தை முன்ணிட்டு தேசிய ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி தனுசியா பாலேந்திரன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சிறீனிவாசனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவிகள், இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதம விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் தானியங்கி மூலமாக இரத்த பரிசோதனை உபகரணத்தை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவி ரோகிதா புஸ்பதேவனிற்கு 25000 ரூபா ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.h1 தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு

h2 தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு

h3 தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு

h4 தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு

h5 தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு