தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உடன் தலையிடுங்கள் – பேராயரிடம் கோரிக்கை

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் நேற்று சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் தற்போது மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரியுள்ளனர்.

எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் கோவிட்-19 ஆகியவற்றின் விளைவாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கர்தினால் அரசாங்கத்துக்கு விளக்கமளிக்க வேண்டுமென தாம் விரும்புவதாக தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தச் சிக்கல்களைத் தீர்க்க கர்தினாலை தலையிடுமாறு நாம் கேட்டுக் கொண்டோம் என அவர் கூறினார்.

இதேவேளையில் எரிபொருள் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் உடன் நிவாரணம் வழங்குமாறு பேராயர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் நெருக்கடியைச் சந்திக்கும் மக்களுக்கு இது பெரும் சிரமத்தைக் கொடுப்பதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்யுள்ளார்.