Tamil News
Home செய்திகள் தரம் 5 புலமைப் பரீட்சை எழுதாத மாணவர்கள் வடக்கில் அதிகம்

தரம் 5 புலமைப் பரீட்சை எழுதாத மாணவர்கள் வடக்கில் அதிகம்

சிறீலங்காவில் இம்மாதம் 11ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2 ஆயிரத்து 531 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2 ஆயிரத்து 325 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதோடு மன்னார் மாவட்டத்திலே 2 ஆயிரத்து 107 மாணவர்கள் விண்ணப்பித்த போதும் ஆயிரத்து 961 மாணவர்கள் மட்டுமே பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 146 மாணவர்களும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 114 மாணவர்களும்  யாழ்ப்பாணத்தில் 157 மாணவர்களும் கிளிநொச்சியில் 39 மாணவர்களும்  வவுனியாவில் 32 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version