Tamil News
Home செய்திகள் தமிழ் தேசியக் கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது!

தமிழ் தேசியக் கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாகப் பதிக்க வேண்டிய காலம் இது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு விழா அண்மையில், கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், இந்த அரங்கு தனக்குள்ளே நிறைய இருப்புக்களைக்கொண்டுள்ளது.

ஏறக்குறைய 2009ம் ஆண்டு வரையான இந்த செழுமைகளின் வேரும் விழுதும் இந்த மண்ணில் இருந்து தான் தோன்றியது. தமிழன் வாழ்ந்த மண்ணில் இருந்து தான் தோன்றியது. அந்தப்பதிவுகளின் இருப்போடுதான் இன்றும் வாழ்கிறோம்.

முதலில் நாங்கள் உறுதி பூணவேண்டும். எங்களுக்கு மண்ணால் இருக்கின்ற தொழில் வாய்ப்புக்களையும், தொழில்நுட்பங்களையும், விஞ்ஞானத்தையும் அறிவியல் வளர்ச்சியையும், எங்களுக்குரியதாக மாற்றுவதற்கு ஒரு மக்கள் இயக்கமாக மாற்றம் பெறவேண்டும்.

ஒரு தேசிய இனத்தின் இருப்பை பாதுகாப்பதும், காவு கொள்வதும் இதனுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதும் அரசியல் கட்சிதான். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரிவர செய்ய வேண்டும்.

முன்னர் தமிழரசின் தலைவர்களை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சந்தித்து பல மணி நேரம் தமிழர் விடயம் தொடர்பில் பேசினார். ஆனால் இன்றைய தலைவர்களுடன் நிமிடக்கணக்கிலும், விமான நிலையத்திலும் சந்தித்து விட்டு செல்கின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் ஜெனிவாவில் தமிழர் பிரச்சினை சூடுபிடிக்கும்.

இந்தப்பிரச்சினையையும், தமிழர்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வையும், சிறந்த முறையில் கையாள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாக பதிக்க வேண்டிய காலம் இது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version