Tamil News
Home செய்திகள்   தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை கோத்தா ஒருபோதும் ஏற்கமாட்டார் – வீரவன்ச

  தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை கோத்தா ஒருபோதும் ஏற்கமாட்டார் – வீரவன்ச

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ  தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஹொரணையில் இன்று(16) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது  ஆதரவு  யாருக்க என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள்  முழுமையான கவனம் செலுத்தி வருகின்றது.  ஐந்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து 13 பிரதான  நிபந்தனைகளை உள்ளடக்கிய கோவையினை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த நிபந்தனைகள் தொடர்பில் பிரதான 3 ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தைகளை விரைவாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இக்கோரிக்கைகள் தொடர்பில் ஒருபோதும் கவனம் செலுத்த மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version