Tamil News
Home உலகச் செய்திகள் தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கக் கோரும் அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்

தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கக் கோரும் அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இக்குடும்பம் ஆயிரம் நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது தஞ்சக்கோரிக்கை தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை விடுவிக்கப்பட வேண்டும் என்கிறது அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்.
இக் குடும்பம் சிறைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக கவலைத் தெரிவிக்கப் பட்டுள்ள கடிதத்தில் சுமார் 700 சுகாதார நிபுணர்கள் கையெழுத் திட்டிருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து சிறைப்படுத்துவது குழந்தைகள் கோபிகா, மற்றும் தருணிகாவை மேலும் பாதிக்கும் என அவர்கள் கவலைக் கொண்டிருக்கின்றனர்.
“குழந்தை பிறந்த முதல் 2,000 நாட்கள் மிகவும் சிக்கலுக்குரியவை. சிறிய வயதில் ஏற்படும் அனுபவங்கள் நீடித்த விளைவுகளைக் கொண்டிருக்கும்,” என்கிறார் அவுஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவரான மருத்துவர் உமர் கோர்ஷித்.
Exit mobile version