Tamil News
Home செய்திகள் தமிழர் பகுதிகளில் மீண்டும் கட்டப்படவுள்ள பொருத்து வீடுகள்!

தமிழர் பகுதிகளில் மீண்டும் கட்டப்படவுள்ள பொருத்து வீடுகள்!

வடக்கு மாகாணத்தில் மீண்டும் பொருத்து வீடுகள் கட்டப்படவுள்ளன.

இந்நிலையில், குறித்த வீட்டின் மாதிாியில் சிறு திருத்தம் செய்வதுடன் மூலப்பொருட்களை இலங்கையில் தயாாிக்கலாம் என யோசனை கூறப்பட்டுள்ளது.

இந்த யோசனை தொடா்பாக பிரதேச செயலா்கள் மாவட்ட செயலகங்களுக்கு அறிக்கை சமா்ப்பித்திருக்கின்றனா். வடகிழக்கு மாகாணங்களில் 19 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டப்படவுள்ளது.

இதற்கான மாதிாி வீடு பதுளை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை ஆராய்வதற்காக வடக்கில் உள்ள 5 மாவட்டங்களினதும் பிரதேச செயலா்கள் நோில் சென்று ஆய்வுகளை நடாத்தியிருந்தனா்.

இவ்வாறு பயணம் மேற்கொண்ட பிரதேச செயலாளர்களில் சிலர் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். குறித்த வீட்டிற்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சீன நிறுவனம் ஒன்றினாலேயே முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் ஒரு வீட்டின் பெறுமதி 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் குறித்த வீட்டினை அமைக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயன்ற சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பினை வெளியிட்டது.

அதன்போது உரும்பிராய் பகுதியில் ஒரு மாதிரி வீடு அமைக்கப்பட்டபோதும் அவ்வீட்டின் நிலமை இன்று கேள்விக்கு உட்பட்டுள்ளது.

Exit mobile version