தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஏற்கவில்லை;ஜேவிபி யின் கூட்டத்தில் கலந்துகொண்டமை பெருமை

1971ல் ஜேவிபி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது.

பின்னர் 1989ல் அதே ஜேவிபி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது.

பயங்கரவாதி என்று கூறியே ஜே.விபி தலைவர் ரோகன விஜேயவீராவை இலங்கை அரசு சுட்டுக் கொன்றது.

அவரை மட்டுமல்ல அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களையும் பயங்கரவாதிகள் என்று கூறியே அப்போது இலங்கை அரசு கொன்றது.

பயங்கரவாத இயக்கம் என்று கூறியே ஜேவிபி அமைப்பை இலங்கை அரசு தடை செய்தது.

இப்பவும்கூட ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவோ அல்லது ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்றோ ஜேவிபி கூறவில்லை

ஆனால் அந்த ஜேவிபி இயக்கம் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டதை சுமந்திரன் பெருமையாக கூறுகிறார்.

தமிழ் இளைஞர்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறும் சுமந்திரன்,

ஆயுதப் போராட்டம் நடத்திய ஜேவிபி யின் ஊர்வலத்தில் பங்கு பற்றியதை எப்படி பெருமையாக கூற முடிகிறது?

இதற்கு சுமந்திரன் பதில் தர மாட்டார் என்று தெரியும். எனவே யாராவது சுமந்திரன் விசுவாசிகள் பதில் தாருங்கள்.

Balan Chandran