தமிழரசுக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று -துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தமிழரசுக் கட்சிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியது தொடர்பில் அந்த கட்சியின் பொருத்செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர கட்சியில் உள்ள மாவை சேனாதிராஜாவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITAK தமிழரசுக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று -துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?இது தொடர்பில் செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்த தீர்மானத்தை சி.வி.கே சிவஞானம், கட்சியின் நிதிப் பொறுப்பாளர் கே. கனகசபாபதி, யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ப. குகபாலன் ஆகியோரே கொண்டுவந்தனர். இவர்கள் மாவையின் ஆதரவாளர்கள்.