தமிழனின் பார்வையில் மூலமொழி ஆய்வு

தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதை உறுதிப்படுத்துவதற்கு  பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தமிழ் மொழி ஆய்வாளரும் எழுத்தாளருமான முனைவர் திரு கு. அரசேந்திரன் அவர்கள், தமிழ் மொழி பற்றி ஆய்வு செய்து வருபவராவார். இவரின் தமிழ் மொழி ஆய்வு  தொடர்பான ஒரு முயற்சியாக தமிழ் சொற்கள்  பற்றிய தொடர் சொற்பொழிவு ஒன்றை நேரலையாக நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த சொற்பொழிவு ஒவ்வொரு மாத இறுதியில் வரும் சனிக்கிழமைகளில் நடைபெறும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சொற்பொழிவில் முதலாவது சொல்லாக ஆங்கிலத்தில் உள்ள ‘ EYE’ ‘ஐ – கண்’ என்ற சொல்லும், சமஸ்கிருதத்தில் உள்ள அக்க்ஷி (Akshi ) என்ற சொல்லும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவை என்பது தொடர்பாக  ஆய்வு நடைபெறவுள்ளது.

இந்த சொற்பொழிவு ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 30 நிமிடங்கள் சொல் பற்றி முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் சொற்பொழிவாற்றுவார். அடுத்து வரும் 30 நிமிடங்கள் இந்த சொல் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கமளிப்பார்.

இந்த சொற்பொழிவு நேரலையாக நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழி தொடர்புகளுக்கு:

Live@: facebook.com/IATR-Y என்ற முகநூல் வழியாகவும் ,

Youtube WorldLiterature TV என்ற யூரியூப் வழியாகவும்

கலந்து கொள்ள முடியும் என்பதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறியத் தந்துள்ளனர்.

நிகழ்வு நடைபெறும் நேரம்:

இந்திய நேரம்:  பிற்பகல் 5.30 மணி

பிரித்தானிய நேரம்:  பிற்பகல் 1.00 மணி

அமெரிக்க நேரம்:  காலை 7.00 மணி

அவுஸ்திரேலிய நேரம்:  இரவு 10.00 மணி

Tamil Research தமிழனின் பார்வையில் மூலமொழி ஆய்வு