தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு

தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதோடு தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது.

இதையடுத்து, இன்று சென்னை கிண்டியில் உள்ள  ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமானம் செய்துவைத்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 700 பேர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் பங்கேற்றனர்.