Tamil News
Home செய்திகள் தமிழக தேர்தல் மேடைகளில் ஈழம் குறித்து கருத்து-கண்டுகொள்ளத் தேவையில்லை என அரசாங்கம் தெரிவிப்பு

தமிழக தேர்தல் மேடைகளில் ஈழம் குறித்து கருத்து-கண்டுகொள்ளத் தேவையில்லை என அரசாங்கம் தெரிவிப்பு

தமிழக தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்களின் விவகாரம் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஈழம் குறித்து இந்திய அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என தொலை நோக்கு கல்வி மேம்பாடு இராஜங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முடிவுடைந்த பிறகு தேர்தல் மேடைகளில்  குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் மறைக்கப்பட்டு விடும். கால காலமாக இவ்வாறானா தன்மையே காணப்படுகின்றது.

பாரிய போராட்டத்திற்கு மத்தியில் 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஆகவே நாட்டில் இனியொருபோதும் பிரிவினைவாத செயற்பாடுகள் எவ்வழிகளினாலும்  தோற்றம் பெறாது” என பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version