Tamil News
Home செய்திகள் தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை

தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை

இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடத்தை வகிக்கின்றது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டுதான் மாணவர்கள் மிக அதிகளவில் தற்கொலை செய்து கொண்ட ஆண்டாகப் பதிவாகியுள்ளது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 10,000இற்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தப் புள்ளி விபரம் தேசிய குற்றப் பதிவு அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளினுடைய விபரங்களை ஆராய்கின்றது. இந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 81758 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.

இந்தியாவில் தற்கொலையில் மராட்டியம் முதலிடம் வகிப்பதாகவும், தமிழ்நாடு இரண்டாமிடம் வகிப்பதாகவும், மத்தியப் பிரதேசம் மூன்றாம் இடம் வகிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 2018ஆம் ஆண்டு தான் முதலிடம் வகிக்கின்றது. அந்த ஆண்டில் மட்டும் நாட்டில் நடந்த ஒட்டுமொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 1.3 இலட்சம் என்பதாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் 8% மாணவர்களாவர்.

தேர்வில் தோல்வி, மன அழுத்தம், குழும்பச் சூழல், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் பயம் உள்ளிட்ட பல காரணங்கள் மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களாக குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version