Home செய்திகள் தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாறும் தேசிய கல்வியியற்கல்லூரிகள்!

தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாறும் தேசிய கல்வியியற்கல்லூரிகள்!

வடக்கு கிழக்கில் உள்ள தேசிய கல்வியியற்கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் என்பன தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

குறித்த கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்கள் கட்டம் கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நாளைய தினம் யாழ். கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரி ஆசிரிய மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

WhatsApp Image 2020 10 11 at 4.08.22 AM தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாறும் தேசிய கல்வியியற்கல்லூரிகள்!

இராணுவத்தின் கோரிக்கைக்கு அமைவாக கல்வி அமைச்சின் அனுமதியுடன் குறித்த கல்லூரிகள் தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இங்குள்ள விடுதிகள் முதற்கட்டமாக இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அதே வேளை நாட்டில் உள்ள ஏனைய தேசிய கல்வியியற்கல்லூரிகளுக்கும் அமைச்சினால் குறித்த அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த முறை கோரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தை கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
அயல் கிராம மக்கள்  ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்காமல் இராணுவத்தினர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களை தனிமை படுத்தும் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version