தந்திரிமலைப் பகுதியில் சிறீலங்கா பேரூந்து மீது தாக்குதல்

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெற்றுவரும் இன்றைய தினம் அதிகாலை மக்களை வாக்கு நிலையங்களுக்கு அழைத்துச் சென்ற பேரூந்துகள் மீது இனந்தெரியாத நபர்கள் கற்கள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பகுதியில் இருந்து சிலாவத்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த போரூந்துகள் மீதே தந்திரிமலைப் பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஒருவரும் காயமடையவில்லை என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா தேர்தல் கண்காணிப்புக் குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்து வருகின்றது.

இதனிடையே, வடபகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் வீதித் தடைகள் தமிழ் மக்களுக்கு பழகிப்போன ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.