Tamil News
Home செய்திகள் தடைகளுக்கு மத்தியில் யாழில் ஆரம்பமாகியது முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

தடைகளுக்கு மத்தியில் யாழில் ஆரம்பமாகியது முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், சிறீலங்கா பொலிஸார் மற்றும் படையினரின் தடையையும் தாண்டி யாழ்ப்பாணம் செம்மணியில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகலில் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதையடுத்து தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதல் நாள் நினைவுகூரப்பட்டது.

தகவல் வெளியானதையடுத்து பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் படையினர் ஆகியோர் குறித்த இடத்தில் குவிந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுமக்களை மேலும் அதிகமான உன்னிப்புடன் கண்காணித்துவரும் பாதுகாப்புத்துறையினர் இன்றைய நினைவுகூரும் நிகழ்விலும் இடையூறு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்தத் தடைகளை மீறி ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.

Exit mobile version