ட்ரம்ப் ஆல் மட்டுமே பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற முடியும் – ஒஸாமா பின்லேடனின் மருமகள்

அமெரிக்காவை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு ட்ரம்ப் ஆல் மட்டுமே முடியும் என ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடின் நியூயோர்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில், உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே ஒசாமா பின்லேடன் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். அவரை எதிர்த்துப் போட்டியிடும் பிடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாகத்தேர்ந்தெடுக்கப்பட்டால், 9/11 போன்று மற்றும் ஒரு தாக்குதல் அமெரிக்காவில் இடம்பெறலாம் என்று கூறினார்.

ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடன் மகளான நூர் பின்லேடின் பிரபல சுவிஸ் எழுத்தாளர் கார்மென் டுஃபோரை திருமணம் செய்து பின்னர் இருவரும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். தற்போது நூர் பின்லேடன் தனது தாய், இரண்டு சகோதரிகளுடன் சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார்.

நூர் சுவிஸில் வாழ்ந்த போதும், 2015இலிருந்து ட்ரம்ப் ஐ ஆதரித்து வருபவராவார்.

கடந்த 2001 செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய 4 தாக்குதல்களில் 2,977 பேர் கொல்லப்பட்டனர். 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஒசாமா பின்லேடன், சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.