டெல்லியில்  வெப்ப அலை வீசி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய தலைநகர் டெல்லியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இது வழக்கத்தை விட அதிகமானது என்றும் வானில ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சுமார் 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் வெப்ப நிலையில் 40.1 ஆக பதிவாகி உள்ளது.

இதுபோன்ற வெப்பநிலை கடந்த 1946 ஆம் ஆண்டில்தான் பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில், ‘தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் 2 ஆம் திகதிவரை வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவித்துள்ளார்.