ஜேர்மனியில் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட  ஈழத் தமிழர் விடுதலை

ஜேர்மனில் போர்க் குற்றம் சுமத்தப்பட்டு, 2009இல் ஜேர்மன் பொலிசாரால் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2009 இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்த போது ஜேர்மன் நாட்டிற்கு சென்ற சிவதீபன் என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இராணுவத்தினரை தீமூட்டி கொன்றதாக டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  வந்த வேளை, குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும், இவரின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என்பதாலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.