ஜெனீவா தீர்மானம் சட்டவிரோதமானது – சிறீலங்கா

கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட சிறீலங்கா தொடர்பான தீர்மானம் சட்டவிரோதமானது என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா தெரிவித்துள்ளதாவது:

தீர்மானம் சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்கின்றது. சிறீலங்கா இறைமையுள்ள நாடு. புதிய தீர்மானத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும் நாம் ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடன் தொடர்ந்து உறவுகளை பேணுவேம். முன்னைய அரசு தீர்மானத்திற்கு அனுசரணையாக நடந்து பெரும் துரோகம் செய்துள்ளது. நீதி விசாரணையை அரசு உள்நாட்டிலேயே மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.