Tamil News
Home செய்திகள் ஜெனிவா பிரேரணை குறித்த முதன்மை நாடுகள் அறிக்கை – அதிர்ச்சியில் கோட்டாபய அரசு

ஜெனிவா பிரேரணை குறித்த முதன்மை நாடுகள் அறிக்கை – அதிர்ச்சியில் கோட்டாபய அரசு

 

ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள மனித உரிமைகள் பேரவையின் 46 வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் சில விபரங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா தலைமையிலான முதன்மை நாடுகள் ஐந்து இணைந்து இந்த பிரேரணையை முன்வைக்க உள்ளன. இது தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதில் போர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டுதல் ஆய்வு செய்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி எதிர்கால விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அவற்றை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை மீதான தோல்வி குறித்து சுட்டிக்காட்டி உள்ளதுடன் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் நிலைமையை கண்காணித்து அறிக்கை படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சுயாதீனமற்றது எனவும் அந்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version