ஜெனிவா தீர்மானத்தால் பொருளாதர நெருக்கடி, பயணத் தடை வருமா?

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை மீது உடனடியாகத் தாக்கம் எதனையும் ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கும் இராஜதந்திர வட்டாரங்கள், 40 க்கும் அதிகமான நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கியிருக்கும் நிலையில், நீண்ட காலத்தில் சில நாடுகளுடனான வர்த்தகத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கின்றார்கள்.

அதனைவிட இந்தத் தீர்மானத்தின் விளைவாக இராணுவ அதிகாரிகள் சிலர் மீது பிரயாணத் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம் உட்பட 40 க்கும் அதிகமான நாடுகள் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன. இதில் சில நாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. இருந்த போதிலும் அவை இணை அனுசரணையை வழங்கியிருந்தன.