ஜூன் மாதம் முழுதும் இலங்கை முடக்கப்படுமா? 11 ஆம் திகதி இறுதி முடிவு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி இறுதி முடிவு எடுக் கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் செயலணிக் கூட்டத்தின்போதே இது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் மாதம் முழுவதும் பயணத் தடையை அமுல்படுத்துமாறும், குறைந்தபட்சம் ஜூன் 21 ஆம் திகதி வரையாவது கடும் கட்டுப்பாடுகள் அவசியம் என சுகாதார தரப்புகள் கோரிக்கை விடுத் துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை நீடிப்பு குறித்து அரச தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 11 ஆம் திகதியன்றே அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.