Tamil News
Home உலகச் செய்திகள் ஜமால் கொலைக்கு சவுதியை பொறுப்பேற்க வைப்பேன்-அமெரிக்கா அதிபர்

ஜமால் கொலைக்கு சவுதியை பொறுப்பேற்க வைப்பேன்-அமெரிக்கா அதிபர்

பத்திரிகையாளர்  ஜமால் கொலைக்கு சவுதியை பொறுப்பேற்க வைப்பேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் உத்தரவிட்டார் என்று நாங்கள் நடத்திய விசாரணையில் மதிப்பிட்டுள்ளோம். ஜமாலைக் கொல்ல சல்மான்தான் உத்தரவிட்டிருக்கிறார்” என்று கூறப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் அறிக்கையை சவுதி  கடுமையான எதிர்த்திருந்தது.

இந்த நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கூறும்போது, “ நான் சவுதி மன்னரிடம் பேசினேன். இளவரசிரிடம் அல்ல, ஆட்சி மாற்றப்பட்டு விடட்டது. சில மாறுதல்களை கொண்டு வர போகிறோம் என்று நான் அவரிடம் கூறினேன்.

மனித உரிமை மீறல்களுக்கு சவுதி நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம்.   ஜமால் கொலைத் தொடர்பாக வந்த அறிக்கையை கடந்த அரசு வெளியிடவில்லை. நாங்கள் எங்களிடம் வந்தடைந்தவுடன் அதனை வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version