ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு பயணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ பயணமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்டுள்ளார்.

குறித்த  விஜயத்தின் போது , சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்த நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலொன்றை முன்னெடுக்ககவுள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஜனாதிபதி ஜப்பான் பயணிக்கவுள்ள நிலையில் அந்த நாட்டு பிரதமர் புமியோ கிஷிடாவுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

இதன்போது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் டோக்கியோவில் இடம்பெறும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பார் என எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.