Tamil News
Home செய்திகள் ஜனாதிபதி தேர்தல் தகவல்களை சேகரிக்கும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு முகவர்கள்

ஜனாதிபதி தேர்தல் தகவல்களை சேகரிக்கும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு முகவர்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் முகவர்கள் பலர் கொழும்பிற்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் முதல்முறையாக அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதனாலேயே குறித்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் கொழும்பிற்கு வந்துள்ளதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் எவ்வாறு எதிர்த்துப் போட்டியிடுகின்றன என்பதை கவனிப்பதற்காக புலனாய்வு அமைப்புகள் இரகசியமான பணியில் ஈடுபட்டுள்ளன.

வெளிநாடுகளின் தலையீடுகள், மற்றும் கட்சிகளுடனான தொடர்புகள் குறித்து அவர்கள் அக்கறை கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version