Tamil News
Home செய்திகள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை

ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை

நேற்று நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.

இந்த 50 வீதத்தை எவரும் பெறவில்லையாயின், இரண்டாம் விருப்பு வாக்கு அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

முதல் இரண்டு இடங்களை வென்ற வேட்பாளர்கள் தவிர, ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளில் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள விருப்பு வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்த வகையிலும் இரண்டு வேட்பாளர்களும் சம வாக்குகளைப் பெறுமிடத்து, திருவுளச் சீட்டு மூலம் வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார்.

இதன்படி இரண்டு சீட்டுக்களில் ஒன்று மற்றும் பூஜ்ஜியம் என இலக்கங்கள் எழுதப்பட்டு, இரண்டு வேட்பாளர்களிடமும் தெரிவு செய்ய அறிவுறுத்தப்படும். இதில் ஒன்று என்ற இலக்கச் சீட்டைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

Exit mobile version