Tamil News
Home உலகச் செய்திகள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் பெர்சவரன்ஸ் ரோவர் – முதல் காணொளியை வெளியிட்ட நாசா

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் பெர்சவரன்ஸ் ரோவர் – முதல் காணொளியை வெளியிட்ட நாசா

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம் தேதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் 293 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்து, கடந்த 18ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை பெர்சவரன்ஸ் ரோவர் தொடங்கி உள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள கேமராக்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.

Exit mobile version