சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி

சென்னையில் வருட ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெருந்தொகையான மக்கள் இந்த புத்தக கண்காட்சியை கண்டுகளிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களாக உள்ளனர். முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் கூட்டம் இம்முறை கண்காட்சிக்கு வருகை தருவதை காணமுடிகின்றது.

சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், சென்னையின் 43ஆவது புத்தககக் கண்காட்சி ஜனவரி 9ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. 09ஆம் திகதி கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி தொடக்கி வைத்தார். இம்முறை சுமார் 700 அரங்குகளில் 15 இலட்சம் தலைப்புகளில் 2கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

சாதாரண நாட்களில் பிற்பகல் 3.00மணிமுதல் 9.00 மணிவரையும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையும் கண்காட்சி நடைபெறுகின்றது. 10 ரூபா நுழைவுக் கட்டணமாக அறவிடப்படுகின்றது. ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகின்றது. புத்தகங்களுக்கு 10 வீத விலைக்கழிவு வழங்கப்படுகின்றது.

24.08.1976இல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் புத்தக ஆர்வலர்களின் தேவைக்காகவும், அவர்களின் வாசிப்பை மேம்படுத்தவும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இதற்காக சென்னை அண்ணாசாலையிலுள்ள மதுரஸா மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் ஓர் புத்கக் கண்காட்சியை நடத்தியிருந்தனர். 28 ஆண்டுகளாக அதே வளாகத்தில் ஆண்டிற்கொரு முறை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்தது. இதன் மூலம் புத்தக வாசகர்களும், வெளியீட்டாளர்களும், விற்பனையாளர்களும் பல்கிப் பெருகத் தெடங்கினர். இவர்கள் அந்தக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர். தற்போது அந்தக் கூட்டமைப்பில் 489 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.chennai book fair சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி

தமிழகத்தில் சென்னையில் 41 ஆண்டுகளும், மதுரையில் 12 ஆண்டுகளும், கோவையில் 4 ஆண்டுகளும் புத்தக கண்காட்சியை வருடந்தோறும் நடத்தி வருகின்றது. இங்கு தமிழ் ஆங்கிலம், மற்றும் பல இந்திய மொழிகளிலும் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், விற்பனையும் செய்யப்பட்டு வருகின்றது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் பொதுமக்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை, உணவுச்சாலைகள், மலசலகூட வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதிகள், செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் முதன்மைப்படுத்தும் விடயமாக கீழடி அகழ்வாராய்ச்சி விளங்குகின்றது. இந்த கண்காட்சி பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ஓரிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளின் எலும்புகள், சுடுமண் தாழிகள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி நாகரீகம் தொடர்பான புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. 110499364 d0a6a4b6 3d8c 41b4 aec4 11b727183a2d சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி பாடசாலை, கல்லூரி மாணவர்களுக்கான புத்தகங்கள், பெண்ணியம் தொடர்பான. சுற்றுச்சூழல் தொடர்பான, ஆன்மீகம், பல உள்நாட்டு, வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய நூல்கள், வரலாற்று, சங்ககால இலக்கிய நூல்கள். உதாரணமாக பொன்னியின் செல்வன் நூலை சிறுவர்கள் ஆர்வமாகப் படிப்பதற்காக சித்திரச் சிறுகதை நூலாக வெளியிட்டுள்ளனர். இவை தவிர ஆய்வுகூடங்களுக்குத் தேவையான உபகரணங்கள்,  வரைபடங்கள், சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், இப்படியே அனைத்து தலைப்புகளிலும் நூல்கள் விற்பனையாகின்றன.

ஒவ்வொரு நிலையங்களும் தங்களின் பதிப்புகளை விற்பனை செய்கின்றன. ஆனால் ஈழத்து வரலாற்று நூல்கள், மற்றும் விடுதலை தொடர்பான நூல்கள், தேசியத் தலைவர் தொடர்பான நூல்கள் என ஈழத்துப் படைப்புகள் பல காணப்படுகின்றன. எந்த ஒரு நிலையத்திற்குச் சென்றாலும் அங்கு ஈழத்துப் படைப்புகள் காணப்படுகின்றன. இவை அதிகமாக மக்களால் உற்றுநோக்கப்படுகின்றன.WhatsApp Image 2020 01 17 at 15.36.29 1 சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி

ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்களின் அனேக படைப்புகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஈழத்திலுள்ள ஆன்மீகத் தலங்கள், அவற்றின் வரலாறுகள் போன்றனவும் விற்பனை செய்யப்படுகின்றன.

முள்ளிவாய்க்கால்  தொடர்பான மக்களின் நேர்காணல் நூல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் போராட்டங்கள் பற்றிய நூல்கள், ஈழப் போராட்டம், சிறைச்சாலை பற்றியது, பெண்கள் போராட்டங்கள் பற்றியது என பல தலைப்புகளிலான நூல்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஈழ போராட்ட ஆர்வலர்கள் இந்த நூல்களை அதிகம் வாங்குவதை காணக்கூடியதாக உள்ளது. அட்டைப் படங்களிலேயே கதையின் சுருக்கம் விளங்கக்கூடியவாறு அட்டைப்படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், புத்தகத்தின் விலை ஓரளவு குறைவாக இருப்பதாலும் அனைவராலும் அவற்றை வாங்க முடிகின்றது.

இப்போது ஆண்டின் முதல் மாதம் என்பதால், நாட்காட்டி விற்பனை விசேடமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இங்கு  தேசியத் தலைவர் அவர்களின் படங்களைத் தாங்கிய மாதாந்த நாட்காட்டி அனேக நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு நாட்காட்டியின் விலை 100 ரூபா என்பதால், பெரும்பாலானோர் அதை வாங்கிச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.bookt6117 சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி

ஈழத் தமிழர் தொடர்பான வெளியீடுகள் இங்கு அதிகம் விற்பனையாகி வந்தது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், அவர்களின் வெளியீடுகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக  உறுப்பினர்கள் கோரியிருந்தனர். இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிநித்திருந்தனர். ஆனால் அந்த வெளியீடுகள் எவையும் அப்புறப்படுத்தப்படவில்லை. தொடர்ந்தும் அங்கு விற்பனையாகிய வண்ணமே இருக்கின்றன.

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான அன்பழகன் புத்தகக் கண்காட்சியில் தனது ஆக்கங்களை  காட்சிப்படுத்தியிருந்தார். அதில் அவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அமைச்சர்களின் ஊழல்கள் என சில புத்தகங்களை எழுதி வைத்திருந்தார். இதன் காரணமாக பொலிசார் அவரை கைது செய்திருந்தனர். இவரின் கைதிற்கு பல அரசியல்வாதிகளும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

புத்தக கண்காட்சியில் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களும் வருகை தந்துள்ளனர். எனவே அவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களும் மக்களுக்கு கிடைக்கின்றன. பொன்னியின் செல்வன் சித்திரத்தை வரைந்த ஓவியரும் அங்கு இருந்தார்.  ஓவியத்தின் மூலம் சிறுவர்கள் நூல்களை விரும்பிப் படிப்பார்கள் என்பதால் இந்த சித்திரங்களை வரைந்ததாக கூறினார்.