Tamil News
Home செய்திகள்  சுவிஸ் துாதரக ஊழியருக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல்

 சுவிஸ் துாதரக ஊழியருக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல்

2019 நவம்பர் மாதம் தான் கடத்தப்பட்டதாக கூறி, பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக சிறீலங்காவில் உள்ள சுவிஸ் துாதரக ஊழியர் ஊழியர் கனியா பெனிஸ்டர் பிரான்ஸிஸஸிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  இன்று குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸ் துாதரகம் 2019 நவம்பர் மாதம்  தங்கள் ஊழியர் கனியா பெனிஸ்டர் கடத்தப்பட்டு   தடுத்து வைக்கப்பட்டதாகவும் துாதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அச்சுறுத்தியாதாகவும் அரசாங்கத்திடம் முறைப்பாடு அளித்தது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுவிஸ் துாதரக ஊழியர்களின் குற்றச்சாட்டுக்களானது ஆதாரமற்றது என கண்டறியப்பட்டதாகவும் கனியா பெனிஸ்டர் 2019 டிசம்பர் 16ம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் டிசம்பர் 30ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version