Home ஆய்வுகள் சுமந்திரனின் புதிய திட்டம் குழப்பத்தில் மாவை, சரா!-கொழும்பிலிருந்து அகிலன்

சுமந்திரனின் புதிய திட்டம் குழப்பத்தில் மாவை, சரா!-கொழும்பிலிருந்து அகிலன்

நாடாளுமன்றம் எப்படியும் இந்த மாத இறுதியில் கலைக்கப்படப்போகின்றது. ஏப்ரல் இறுதிப்பகுதியில் பொதுத்தேர்தல் நடக்கப்போகின்றது. இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது.

தேர்தல் வரப்போகிறது என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டதால் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளை போல தமிழ் கட்சிகளும் தங்களை பலப்படுத்துவதிலும், கூட்டணி அமைத்துக் கொள்வதிலும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். இந்தப் பலப்படுத்தும் செயற்பாடுகளிலும் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதிலும் தமிழ் தரப்பினரிடையே குழப்பங்களும் குளறுபடிகளும் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெறும் சில குளறுபடிகள் தொடர்பில் இந்த வாரம் பார்க்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இப்போது மூன்று கட்சிகள் தான் இருக்கின்றன தமிழரசுக்கட்சி பிரதானமாக இருக்கின்றது அதனைவிட புளொட், ரெலோ என்பன அதில் அங்கம் வகிக்கின்றன. ரெலோவிலிருந்து ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் தலைமையிலான அணி வெளியேறிச்சென்றமை ரெலோவை யாழ்ப்பாணத்தில் சற்று பலவீனப்படுத்தியுள்ளது.

சார்பில் யாழ்ப்பாணத்தில் யாரை இறக்குவது என்பதில் உருவாகிய பிரச்சினைக்கு ரெலோ முடிவு காண்டுள்ள போதிலும் கூட, சர்ச்சைகள் தொடர்கதையாக தான் இருக்கின்றது. கூட்டமைப்புக்குள் இருக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளின் பிரச்சினை தீர்ந்தாலும் கூட, தமிழரசுக்குள் உருவாகியிருக்கும் புதிய பிரச்சினைதான் சம்பந்தனுக்குத் தலையிடியைக் கொடுக்கின்றது.

தமிழரசுக் கட்சிக்குள்
புதியவர்களுக்கு இடம்?

வடமாகாணத்தில் ஆசனங்கள் எவ்வாறு பங்கேற்பது என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இணக்கப்பாடு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 10 வேட்பாளர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிறுத்த வேண்டும்.

இதில் ரெலோவுக்கு ஒன்று. புளொட்டுக்கு இரண்டு இடங்களையும் கொடுத்திருக்கின்றார். தமிழரசு கட்சியின் சார்பில் ஏழு பேர் களமிறங்குகின்றார்கள். இந்த ஏழு வேட்பாளர்களும் யார் என்பதில் தான் இப்போது சர்ச்சை உருவாகி இருக்கின்றது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கட்டாயம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே நடைமுறையாக இருக்கின்ற போதிலும் கூட, இந்த முறை அதில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்ற ஒரு கோஷத்தை கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முன்வைத்திருக்கின்றார்.

இளைஞர்கள், புதிய முகங்கள், மற்றுட் பெண்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பதால் முதியவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிகொள்வது கட்சியின் எதிர்கால நலன்களுக்கு முக்கி யமானது என்ற கருத்தை சுமந்திரன் முன்வைத்திருக்கிறார்.

இதனடிப்படையில் மாவை சேனாதிராஜா, உதயன் உரிமையாளர் சரவணபவன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சுமந்திரனால் முன்வைக்கப்படுகின்றது. அவர்களுக்கு பதிலாக இளையவராக இருக்கின்ற தன்னுடைய ஆதரவாளர்கள் சிலரை வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்பதுதான் சுமந்திரனின் இலக்கு என கூட்டமைப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.anool சுமந்திரனின் புதிய திட்டம் குழப்பத்தில் மாவை, சரா!-கொழும்பிலிருந்து அகிலன்

குறிப்பாக யாழ்ப்பாண மேயர் ஆர்னோல்ட், சாவகச்சேரி சயந்தன், வலி வடக்கு சுகிர்தன் உட்பட தன்னுடைய ஆதரவாளர்களான 4 பெயரையாவது களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான் சுமந்திரனின் நோக்கம். அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டுமானால் மாவை சேனாதிராஜா சரவணபவன் போன்றவர்களை ஒதுக்கிவிட வேண்டும் என அவர் எதிர்பார்க்கின்றார்.

ஆனால் ஆனால் அந்த இரண்டு பேருமே தாம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு வரலாமென சுமந்திரன் ஒரு யோசனை தெரிவித்து இருந்தார். ஆனால் சம்பந்தனும் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதால் தனக்கு உரிய இடம் கிடைக்குமா என்ற கேள்வி மாவைக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிகின்றது.

ஒதுங்கிக்கொள்ள
மறுக்கும் சரா

மறுபுறத்தில் சரவணபவனும் ஒதுங்கிக் கொள்வதற்குத் தயாராகவில்லை. சரவணபவனுக்கான ஆதரவு தளம் யாழ்ப்பாணத்தில் பெருமளவிற்கு வீழ்ச்சியடைந்து இருப்பதாகவே தெரிகின்றது. இருந்தபோதிலும் தன்னிடம் இருக்கக்கூடிய பணபலத்தையும் பத்திரிகைப் பலத்தையும் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தன்னால் வர முடியும் என்ற நம்பிக்கையுடன் சரவணபவன் இருப்பதாக தெரிகின்றது. அதற்காக சுமந்திரனுட ன் நேருக்கு நேராக மோதுவதற்கும் சரவணபவன் தயாராக இருக்கின்றார்.

சுமந்திரன் இந்த செயற்பாடுகள் தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் சரவணபவன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் இவ்விடயம் தொடர்பில் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என மாவை தெரிவித்திருக்கின்றார். “என்னுடைய நிலைமையும் உங்களுடைய நிலைமை போன்று தான் இருக்கின்றது” என மாவை சரவணபவனுக்கு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.

இந்த விவகாரம் பெரும்பாலும் சம்பந்தனின் கைகளுக்குப் போகலாம் எனத் தெரிகின்றது. சம்பந்தன், சரவணபவனின் ஒரு உறவினரும் கூட. யாழ்ப்பாணம் செல்லும்போதெல்லாம் சரவணபவனின் இல்லத்தில் அல்லது அவருடைய விடுதியில் தங்குவதே சம்பந்தன் வழமையாக கொண்டிருக்கின்றார். அதனால் சம்பந்தன் மூலமாக தன்னுடைய சீட்டை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் சரவணபவனுக்குஇருப்பதாக தெரிகின்றது.

தமிழரசுக் கட்சிக்குள் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு தனக்கு ஆதரவான இளைஞர் அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சுமந்திரன் இறங்கியிருப்பது தமிழரசுக் கட்சியின் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பந்தன் வயது காரணமாவும், உடல்நிலை காரணமாகவும் தீவிரமாகச் செயற்பட முடியாத ஒருவராகிவிட்டார்.

அதேபோல, மாவை சேனாதிராஜாவும் மருந்து மாத்திரைகளுடன்தான் திரிகின்றார். அத்துடன், சிங்களக் கட்சித் தலைவர்கள், இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடிய ஒரு ஆளுமையைக் கொண்டவராக அவர் இல்லை. அதற்கான ஆளுமை சுமந்திரனிடம்தான் இருக்கின்றது.

தனக்கு சவாலாக வரக்கூடிய ஒருவருமே தமிழரசுக் கட்சிக்குள் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட ஒருவராகவே சுமந்திரன் செயற்படுகின்றார். வடமாகாண சபைத் தேர்தல் வருமானால் தனது ஆதரவாளரான ஆர்னோல்டை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவது சுமந்திரனின் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. இதனால், மாவையும், சீவி.கே.சிவஞானமும் குழப்பமடைந்திருக்கின்றார்கள். “மாவை அண்ணை பாராளுமன்றம் சென்றால், முதலமைச்சர் வேட்பாளர் நான்தான்” என சி.வி.கே. அடித்துச் சொல்லிவிட்டார். பத்திரிகை அறிக்கை ஒன்றிலேயே அவர் அவர் கூறியிருக்கின்றார்.

ஆக, தமிழரசுக் கட்சிக்குத் தலைமை தாங்க பொருத்தமான ஒரு ஆளுமை இல்லாமையால் சுமந்திரன் அதற்கு வருவதைத் தடுக்க முடியாத ஒரு நிலைமை இருப்பது உண்மை. சிறிதரன் அதற்கான முயற்சிகள மேற்கொள்கின்ற போதிலும், அதற்கான ஆளுமையோ இ◌ாஜதந்திரிகளுடன் பேசக் கூடிய ஆற்றலோ அவருக்கு இல்லலாவதுதான் மிகப்பெரிய குறைபாடு. ஆக, சுமந்தரனை வீழ்த்த வேண்டும் என தமிழரசுக் கட்சியில் யார் நினைத்தாலும் அது சாத்தியமாகும் என எதிர்பார்க்க முடியாது!

Exit mobile version